சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

510 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்

திருவாடானை தாலுகா, அரும்பூர் ஊராட்சி மன்றத்தில் 510 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறித் துறை அமைச்சர் சுந்தரராஜ் வழங்கினார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:26 pm

தினமணி

 திருவாடானை தாலுகா, அரும்பூர் ஊராட்சி மன்றத்தில் 510 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறித் துறை அமைச்சர் சுந்தரராஜ் வழங்கினார்.

  அரும்பூர் ஊராட்சி மன்றத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

  ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் லாரன்ஸ் தலைமை வகித்தார். தனி ஆட்சியர் திருமலைச்சாமி, சமூக நல அலுவலர் மணிமேகலை, ஊராட்சிக் குழுத் தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்டக் கவுன்சிலர் ஆணிமுத்து, திருவாடானை வட்டாட்சியர் பழனியாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இதில் 510 பயனாளிகளுக்கு விலை இல்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, திருமண நிதியுதவி ஆகியவற்றை அமைச்சர் சுந்தரராஜ் வழங்கிப் பேசியது:

  அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, நோட்டுப் புத்தகம், வண்ணப் பென்சில், காலணி எனப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

  பெண் கல்வி அவசியம் என்ற நோக்கில் ஏழைப் பட்டதாரிப் பெண்களின் திருமணத்திற்கு 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கி வருகிறார்.

  தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 35 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு விலையில்லா  மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படவுள்ளன.

  இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 70 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலையில்லாப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

  கண்மாய், குளங்கள் வறண்டுள்ளன. மழை நேரங்களில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் கடலில் வீணாகக் கலந்தன. இதைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 28 ஆயிரம் கண்மாய்கள் தூர்வாரப்படவுள்ளன என்றார்.

  இதில் அரும்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி, திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவர் காளை, ஒன்றியக் கவுன்சிலர் தமிழ்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.