ஜனவரி மாத மக்கள் தொடர்பு முகாம்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர்கள் நடத்தவுள்ள மக்கள் தொடர்பு முகாம்கள் குறித்து ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர்கள் நடத்தவுள்ள மக்கள் தொடர்பு முகாம்கள் குறித்து ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு: (பங்கு பெற வேண்டிய கிராமங்கள் அடைப்புக்குறிக்குள்)
ஜன.9 கமுதி அருகே என்.வேப்பங்குளம். தலைமை-ஆட்சியர் (நீராவி, என்.கரிசல்குளம்), ஜன.23 திருவாடானா தாலுகாவில் புல்லமடை கிராமம், தலைமை-மாவட்ட வருவாய் அலுவலர், (சித்தனேந்தல்,மேலமடை).
ஜன.30ல் ராமநாதபுரம் தாலுகாவில் மல்லல் கிராமம். தலைமை-வருவாய் கோட்டாட்சியர், ராமநாதபுரம், (களக்குடி, மேலச்சீத்தை). கடலாடி தாலுகாவில் வாலம்பட்டி கிராமம். தலைமை-வருவாய் கோட்டாட்சியர், பரமக்குடி, (டி.கரிசல்குளம், வெள்ளையாபுரம்).
முதுகுளத்தூர் தாலுகாவில் மேலக்கொடுமலூர் கிராமம், தலைமை-மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர், ராமநாதபுரம் (கீழக்கொடுமலூர், நல்லுக்குறிச்சி).
பரமக்குடி தாலுகாவில் சூடியூர் கிராமம், தலைமை-உதவி ஆணையர் (ஆயம்)ராமநாதபுரம், (நெடும்புலி,திருவரங்கி).
பொதுமக்கள் இந்த முகாம்களில் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...