திருவாடானை அருகே ஆர் எஸ் மங்கலம் பகுதியில் நெல் பயிரில் படைப்புழு தாக்குலைக் கட்டுப்படுத்த ஆர் எஸ் மங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் மோகன் ராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.
திருவாடானை அருகே ஆர் எஸ் மங்கலம் பகுதிகளான வடவயல், அத்தானூர் காவனூர் போன்ற பல்வேறு பகுதிகளில் நெல் பயிரில் படைப்புழு தாக்குதல் தென்படுகிறது. இந்த நோய் தாக்குதலால் வயல்கள் முழுவதும் கால் நடைகள் மேய்ந்தது போல் காணப்படும்.
இரவு நேரங்களில் படை படையாக பூச்சிகள் வயல்களை நோக்கி தாக்கி அழித்து வரும் இதகைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 பொறிகள் வீதம் வைத்து கவர்ந்து அழிக்க வேண்டும். மேலும் குளோரோபைரிபாஸ், ட்ரோசோபாஸ், கைகுளோரோவாஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். மற்றும் வயலை சுற்றி குளோரோபைரிஸ் மருந்தை 10 கிலோ மணலுடன் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தன்னை நேரில் அணுகலாம் என தெரிவித்துளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.