சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இளமனூர் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம் அருகே இளமனூரில் அமைந்துள்ள விநாயகர் கோயில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:20 am

DIN

ராமநாதபுரம் அருகே இளமனூரில் அமைந்துள்ள விநாயகர் கோயில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலையில் 2 -ஆவது கால யாக சாலை பூஜைகள் நடந்து
முடிந்த பின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 மூலவரான விநாயகர், பரிவார தெய்வங்களான பாலமுருகன், துர்க்கை, தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன.
 மூலவர் விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின்னர் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
 இரவு  சிவ தத்துவம் என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக்குழுவினரும், இளமனூர் கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.