விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரூ.70 லட்சம் முறைகேடு விவகாரம்: காவடிப்பட்டி கூட்டுறவு சங்க இயக்குநர் ராஜிநாமா

கமுதி அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ. 70 லட்சம் மோசடியை தடுக்க தவறியதாக  5 பேர் ராஜினாமா செய்ததைத்  தொடர்ந்து  அதன் இயக்குநரும் புதன்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:17 am

DIN

கமுதி அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ. 70 லட்சம் மோசடியை தடுக்க தவறியதாக  5 பேர் ராஜினாமா செய்ததைத்  தொடர்ந்து  அதன் இயக்குநரும் புதன்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
    கமுதி அருகே காவடிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2016-இல் வங்கிச் செயலர், தலைவர் ஆகியோர் சேர்ந்து போலியான நபர்களை உருவாக்கி விவசாயக் கடன்களை வழங்கியதில் ரூ. 70 லட்சம்  முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் வங்கி துணைத் தலைவர் உள்பட 5 பேர் ஏற்கெனவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதன்பிறகு வங்கிச் செயலரை தாற்காலிகப் பணிநீக்கம்செய்து, சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இருப்பினும் முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ப்படவில்லை என கூறப்படுகிறது.
  இந்நிலையில், காவடிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநர்களில் ஒருவரான மாணிக்கம்மார்க் தனது உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்துள்ளார். அக்கடிதத்தில் மாணிக்கம் மார்க் கூறியிருப்பதாவது: எனது உடல்நிலை சரியில்லாததால் நான் எனது இயக்குநர் பதவியை ராஜினாமா செய்கிறேன். மேலும் நான் பதவியேற்றபோது மட்டுமே ஒரு தீர்மான புத்தகத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இதன்பிறகு என்னிடம் எந்த கையெழுத்தும் பெறவில்லை. கூட்டம் நடத்தபட்டதாக அறிந்தாலும், எனக்கு தகவல்கள் ஏதும் தெரியபடுத்தவில்லை. எனது கையெழுத்து போலியாக கூட்டுறவு சங்க தீர்மான புத்தகத்தில் இடப்பட்டுள்ளதாக அறிவேன். இதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.  காவடிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவில் இருந்த இயக்குநர்கள் அனைவரும் ஏற்கெனவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளநிலையில் மீதம் இருந்த  ஒரு இயக்குநரும் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதால், குழு கலைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.