தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தொண்டி அருகே அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து பயணிகள் காயம்

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு விரைவுப் பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:53 am

DIN

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு விரைவுப் பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
   தொண்டி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் வட்டாணம் விலக்குச் சாலையில் புதன்கிழமை அதிகாலையில், பேருந்து சென்றபோது, சாலையில் மாடு குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது.  ஓட்டுநர் திடீரென பேருந்தை நிறுத்த முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். தகவலறிந்த தொண்டி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த பயணிகளை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.