விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முதுகுளத்தூர்,கடலாடியில் டெங்கு, கந்து வட்டி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் வியாழக்கிழமை  கந்து வட்டிக்கொடுமை மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:33 pm

DIN

முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் வியாழக்கிழமை  கந்து வட்டிக்கொடுமை மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
     முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும்  முதுகுளத்தூர் காவல்துறையினரும் பங்கேற்ற பேரணி முதுகுளத்தூர் காந்திசிலை முன்பு தொடங்கியது.  பேரணியை முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பி.கே. ரவி துவக்கி வைத்தார். பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மேக்டலின் மேகலா, பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.சசிவர்ணம், என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 தேரிருவேலி முனைரோடு வழியாக பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவு பெற்றது.
 பேரணியில் மாணவர்கள் கந்துவட்டிக் கொடுமை ஒழிப்பு, டெங்கு ஒழிப்பு, சாலை விதிகளை கடைபிடித்தல், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்தல், புகையிலை ஒழிப்பு போன்றவை தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பிச் சென்றனர்.  தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன் வரவேற்றார். பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், ஜே.ஆர்.சி ஆசிரியர்கள் தனம்,ராஜபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.
 இதே போன்று கடலாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், காவல்துறையினரும் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிக்கு கடலாடி காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பொ செல்வராணி, சார்பு ஆய்வாளர் சுந்தரபாண்டி,என்.எஸ்.எஸ்.திட்ட ஒருங்கிணைப்பாளர் சொக்கர் ஆகியோர் முனனிலை வகித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.