ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ராமநாதபுரத்தில் மீன்பிடி தொழிலாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மீன்பிடித் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம்

Updated On :5 ஏப்ரல் 2018, 8:22 am IST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மீன்பிடித் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் வெளியிட்டுள்ள வரைபடங்களை ரத்து செய்ய வலியுறுத்தி புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஏ.பால்ச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் எல்.அன்னம்மாள்,துணைச் செயலாளர் ஏ.காசிலிங்கம், செயலாளர் ஜி.ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மீனவர் பேரவையின் தலைவர் டி.குமாரவேல், கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் டி.மல்லிகா ஆகியோர் பேசினர்.
கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் வெளியிட்டுள்ள வரைபடங்களில் மீனவர்களுக்கான நீண்டகால குடியிருப்புத் திட்டங்கள்,  மீனவ சமுதாயத்தின் பொதுச் சொத்துக்கள்,சமூககட்டமைப்புகள் போன்ற எவையும் குறிப்பிடப்படவில்லை. மீனவர்களுக்கு ஒத்துப் போகாத வரைபடத்தை வெளியிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அவமதிப்பதாகவும் உள்ளது.
 மேலும் கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் விபரங்களை தமிழ் மொழியில் வெளியிட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என்பதையும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   கூட்டமைப்பின் பொருளாளர் ஆர்.மீனாள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.