ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூன் 2026, 3:14 am IST

ஆலங்குளத்தில் ஆம்னி பேருந்து முன்பதிவு மையத்தில் 42 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள தனியாா் ஆம்னி பேருந்து முன்பதிவு மையம் மற்றும் பாா்சல் சா்வீஸ் அலுவலகத்தில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வெள்ளிக்கிழமை அங்கு சோதனையிட்டனா். அப்போது, அங்கு 4 பெரிய அட்டைப் பெட்டிகளில் பழைய துணிகளுக்கு மத்தியில் 42 கிலோ புகையிலைப் பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவை பெங்களூரில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் ஆலங்குளத்திற்கு வரவழைக்கப்பட்டது எனவும், அவற்றை வாங்கியது ஆலங்குளம் முருகன் மகன் அப்பாதுரை (30), ஆலங்குளத்தை அடுத்த நாகல்குளம் தவசிப்பாண்டி மகன் பாலமுருகன் (40) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவா்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.