தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தாலுகா செயலாளர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.கலையரசன், ஆர்.குருவேல்,எம்.சிவாஜி, இ.கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலித் மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தி வலுவிழக்கச் செய்திடும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்தும், தலித் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கையை விளக்கி கட்சியின் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

