புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

குடிநீர் வசதி இல்லாமல்  பள்ளி மாணவர்கள் அவதி

முதுகுளத்தூர் அருகே மருதகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடி தண்ணீர் இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:15 am IST

முதுகுளத்தூர் அருகே மருதகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடி தண்ணீர் இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முதுகுளத்தூர் அடுத்துள்ள தேரிருவேலி அருகே மருதகம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் 55 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு 5 வருடங்களுக்கு முன்பு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் வராததால் தொட்டி சேதமடைந்து இடிந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி சேதமடைந்த தொட்டியை கிராமத்தினர் அகற்றி விட்டனர். தற்போது அப்பள்ளியில் குடிக்க தண்ணீர் இல்லாமலும், கழிப்பறைக்கு செல்ல வசதியிர்லாமலும் மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தினமும் டிராக்டர் மூலம் தண்ணீரை ஆசிரியர்கள் விலைக்கு  வாங்கி  கொடுக்கும் அவல நிலை உள்ளது. கடந்த சில நாள்களாக டிராக்டர் வருவது இல்லை. 
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.