காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

திருவாடானையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாடானை நான்கு வீதி சந்திப்பு ஓரியூர் முக்கு சாலையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

திருவாடானை நான்கு வீதி சந்திப்பு ஓரியூர் முக்கு சாலையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.
இதற்கு தாலுகா தலைவர் அருள்சாமி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் பால்ராஜ், ரெத்தினம், பால்ச்சாமி, சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100 நாள் வேலை திட்டத்தை தனிச்சையாக முடக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், 100 நாள் வேலை நாள்களை 200 நாள்களாக உயர்த்தி அறிவிக்கக் கோரியும்,  இதற்கான சம்பளம் ரூ.205லிருந்து ரூ.400 ஆக உயர்த்தி வழங்கிட வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில துணை தலைவர் முத்து ராமு, மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தாலுகா குழு உறுப்பினர்கள் துரைசிங்கம், செபஸ்தியான்,சிவகாமி, வசந்தகுமார், அன்பின்ராஜா, மனோகரன், மகாலிங்கம் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.