பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியை வீட்டு மனைகளாக மாற்றுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
மனு விவரம்: தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழும் இக்கிராம மக்களுக்கு வாழ்வாதாரமாக தெளிச்சாத்தநல்லூர் கண்மாய் பாசனநீர் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் பரமக்குடி பகுதியில் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலை புறவழிச்சாலையாக இக்கிராமத்து கண்மாய்க் கரை மற்றும் வயல் வழியாகச் செல்கிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நன்கு விளையும் வயல்களையும், கண்மாய் நீர்ப் பிடிப்பு பகுதிகளையும் முறையான அனுமதி பெறாமல், வீட்டு மனைகளாக மாற்றி பொதுமக்களிடம் விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இக்கிராம விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!

இந்தியாவுக்கு 6 வது பதக்கம்! பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் விந்தியாராணி தேவி!

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


