வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கீழராமநதியில் மின் கம்பங்களை சீரமைக்கக் கோரிக்கை

கமுதி அருகே கீழராமநதியில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

கமுதி அருகே கீழராமநதியில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  கீழராமநதியில் உள்ள பெரும்பாலான மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதேபோல், பள்ளிகளின் அருகே சேதமடைந்துள்ள மின்கம்பங்களால் அவ்வழியே மாணவர்கள் அச்சமுடன் கடந்து செல்கின்றனர்.
இந்த மின்கம்பங்களிலிருந்து வீடுகளுக்கு செல்லும் இணைப்புகள், வயர்கள் அதிக அளவில் உள்ளதால் குருவிகூடு போல் காட்சியளிக்கிறது. சிறு காற்றடித்தாலும் மின் கம்பங்கள் ஆடுகின்றன. மேலும், பழுது ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்புப் பணி மேற்கொள்வதற்கும் மிகவும் சிரமப்படவேண்டியுள்ளது.
எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நலன் கருதி, சேதமடைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்க கமுதி மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.