ராமேசுவரம், மண்டபம் உப மின் நிலையங்களில் மாதந்திர பரமரிப்பு பணி ஆகஸ்ட் 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் மின் தடை ஏற்படும். இதனை ராமநாதபுரம் ஊரக உப கோட்ட உதவி செயற்பொறியாளர் எம்.சந்திரசூடன் தெரிவித்துள்ளார்.