கமுதி அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதால் கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கமுதி அடுத்துள்ள பேரையூர்,-பாக்குவெட்டி, கருங்குளம் வழியாக கமுதிக்கு மிகப் பெரிய குழாய்கள் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. சாலையோரங்களில் உள்ள இதன் குழாய்கள் அடிக்கடி வாகன போக்குவரத்தால் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது.
இதனால், கமுதி, பாக்குவெட்டிக்கு குடிநீர் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் குழாய்கள் பழுது காரணமாக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அதிக செலவும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை புதிதாக மாற்றியமைத்து,கிராமங்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









