ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

இரு தரப்பினரிடையே மோதல்: 2 பேர் காயம்;  13 பேர் மீது வழக்கு

முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர். இதில் 13பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர். 

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர். இதில் 13பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர். 
முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் மகன் ஆமோஸ்(40) . அதே ஊரைச் சேர்ந்தவர் அருள்ராஜ் மகன் ஜான்சன். இரு தரப்பினருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக முன் விரோதம் காணப்பட்டது. 
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆமோஸ் வீரம்பல் பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தார். அப்போது  ஜான்சனும், அவரது உறவினர்களும் சேர்ந்து வந்து ஆமோஸை தாக்கினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஆமோஸ், ஜான்சன் ஆகிய இருவரும் காயமடைந்தனர். 
அவர்கள் இருவரையும் மீட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து இளஞ்செம்பூர் போலீஸார் இரு தரப்பிலும் 13 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.