அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

தேசிய அளவிலான லங்காடி போட்டிக்கு தமிழக அணி தேர்வு: முதுகுளத்தூர் வீரர் கேப்டன்

தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டியில் பங்கேற்கும்  தமிழக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அணிக்கு முதுகுளத்தூர் வீரர் தலைமை வகிக்கிறார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டியில் பங்கேற்கும்  தமிழக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அணிக்கு முதுகுளத்தூர் வீரர் தலைமை வகிக்கிறார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 10 ஆவது தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டி செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெற உள்ளது. 
இப்போட்டியில் பங்கேற்கும்  தமிழக அணி வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி மற்றும் பயிற்சி திருச்சி ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதுகுளத்தூர் வீரர் தேவசித்தம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர்.  இவர்களில் தேவசித்தம் உள்ளிட்ட 11 பேர் தமிழக அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர். அணிக்கு தேவசித்தம் கேப்டனாக இருப்பார்.
இந்த அணி வியாழக்கிழமை ஆந்திராவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக தேவசித்தம் தெரிவித்தார். தேவசித்தம்  தலைமையிலான தமிழக அணி ஏற்கெனவே 4 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது. 
இந்த முறையும் சாம்பியன் பட்டம் பெற்று  தமிழகத்திற்கு பெருமை பெற்றுத் தருவதாக அணி வீரர்கள் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்த அவர்,  லங்காடி விளையாட்டை அரசு அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.