இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

நயினார்கோவில் அருகே விஷம் குடித்து மனைவி தற்கொலை: கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள கீழக்காவனூரில் திங்கள்கிழமை குடும்பத் தகராறில்

Updated On :25 டிசம்பர் 2018, 6:20 am IST

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள கீழக்காவனூரில் திங்கள்கிழமை குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக  கணவர் மற்றும் அவரது சகோதரர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 நயினார்கோவில் அருகே உள்ள கீழக்காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்  மகள் சரண்யா (23). இவரும் அதே ஊரைச் சேர்ந்த சிவாஜி மகன் லெட்சுமணன் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சரண்யா தனது மகனுடன் அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.  
இந்நிலையில் சரண்யாவை அவரது கணவர் தகாத வார்த்தைகளால் திட்டினாராம். இதில் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
 இதுகுறித்து நயினார்கோவில் காவல் நிலையத்தில் சரண்யாவின் தந்தை நாகராஜன்  அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் லெட்சுமணன், அவரது சகோதரர் பொக்காரு ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.