சாயல்குடி அருகே ஏடிஎம்மில் நிரப்பக் கொண்டு சென்ற பணத்தில் ரூ.1.85 கோடி மாயமான விவகாரத்தில் கைதான 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த 20 ஆம் தேதி ரூ.2.11 கோடியுடன் ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்காக சென்ற வாகனம் சாயல்குடி அருகே விபத்தில் சிக்கியதாகவும் அப்போது ரூ.1.85 கோடி மாயமானதாகவும் ஊழியர்கள் கூறினர். சாயல்குடி போலீஸார் விசாரித்தபோது வாகன விபத்து திட்டமிட்ட நாடகம் என்பது தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 5,500 கைப்பற்றப்பட்டது.
மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் அன்பு, குருபாண்டியன், முன்னாள் ராணுவவீரர் வீரபாண்டி, ஓட்டுநர் கபிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.32 லட்சத்து 71 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் சனிக்கிழமை (டிச.22) இரவுதான் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் சாயல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது. இந்தநிலையில், திங்கள்கிழமை இரவு சாயல்குடி போலீஸார் முறைப்படி தனியார் நிறுவன பணியாளர்கள் அன்பு, குருபாண்டியன், வீரபாண்டி, கபிலன் ஆகியோரைக் கைது செய்ததாக தெரிவித்தனர்.
அவர்களை முதுகுளத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போலீஸார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 22 முதல் தொடா் போராட்டம்

நாகையில் பழங்கால வெண்கலச் சிலை கண்டெடுப்பு

மயிலாடுதுறையில் ஜூன் 12-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
கோயிலில் நகை திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


