ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் பக்தர்கள் அவதி

திருவாடானை சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் குடிநீர் தட்டுப்பாட்டல் தாங்கள் அவதியடைந்து வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Updated on
1 min read

திருவாடானை சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் குடிநீர் தட்டுப்பாட்டல் தாங்கள் அவதியடைந்து வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட இந்த ஆலயத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு தற்போது பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் குடிநீர் குழாய் அமைத்துள்ளது. அதில் உப்பு கலந்து  தண்ணீர் வருவதால் அதை பருக முடியாத பக்தர்கள், குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கோடைக் காலம் நெருங்குவதால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து இங்கு நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com