திருவாடானை அருகே அரசுப் பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
திருவாடானை அருகே பாரூர் கிராமத்தில் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஈரோட்டில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசுப் பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்து தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்தின் பின்பக்கம் மோதியது.
இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் கல்லூரைச் சேர்ந்த பழனி, அதே ஊரைச் சேர்ந்த பாண்டி உள்பட 10 பேர் காயம் அடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.