தொண்டி அருகே  இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கம் பறிமுதல்: இருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புதன்கிழமை இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்ததுடன்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புதன்கிழமை இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், அதைக் கடத்தி வந்த 2 பேரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
திருவாடானை தாலுகா தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கோவை, மதுரை, தூத்துக்குடியைச் சேர்ந்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த செல்வக்குமார் (40), அதே ஊரைச் சேர்ந்த மருதுபாண்டி (42) ஆகிய இருவரையும், அவர்கள் சோதனையிட்ட போது, அவர்களிடம் சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்கம் இருப்பதும், அது இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளும், கடத்தி வரப்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட செல்வக்குமார், மருதுபாண்டி ஆகிய இருவரும் தொண்டி சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு, பின்னர் மதுரை அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com