சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கண்டிலான் கிராமத்தில் மழை வேண்டி அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு விழா

முதுகுளத்தூர் அருகே உள்ள கண்டிலான் கிராமத்தில் மழை வேண்டி  அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு, பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:21 am

DIN

முதுகுளத்தூர் அருகே உள்ள கண்டிலான் கிராமத்தில் மழை வேண்டி  அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு, பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு முன்னாள் ஊராட்சித் தலைவர் எஸ்.மலைக்கண்ணன் தலைமை வகித்தார். கடலாடி காவல் ஆய்வாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக கிராமத்தினர் கடந்த ஒரு மாதமாக விரதமிருந்து பேரையூர் கிராமத்தில் மண் புடி எடுத்து, அதன்மூலம் செய்யப்பட்ட குழந்தைகள், குதிரை உருவம் கொண்ட பொம்மைகளை தலையில் சுமந்து கோயிலை அடைந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர், கிராம மக்கள் அய்யனார் கோயிலுக்கு முன் பொங்கல் வைத்து, படையலிட்டனர். மாலையில் திருவிளக்கு பூஜை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இத்திருவிழா குறித்து, கண்டிலான் கிராமத்தைச் சேர்ந்த லிங்கம் கூறியதாவது:
ஆண்டுதோறும் எங்களது கிராமத்தில் புரவி எடுப்பு விழா நடைபெறும். வறட்சி நீங்கி, நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து சமுதாய மக்களும் இணைந்து சகோதரத்துவத்துடன்  இவ்விழாவை கொண்டாடி வருகிறோம் என்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கண்டிலான் கிராமத்தினர் செய்திருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.