உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, ராமநாதபுரம் அருகேயுள்ள சுந்தரமுடையான் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
பள்ளி வளாகத்தில் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்ததுடன் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். விழாவிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு -நீதிமன்ற நீதிபதியுமான வி.ராமலிங்கம், வனச்சரகர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மரக்கன்றுகளை நட்டு வைத்த பின்னர் பள்ளிக்கு அருகில் உள்ள சீனியப்பா கடற்கரையிலிருந்து சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியின் நிறைவில் பாம்பன் பாலத்தின் வழியாகச் செல்லும் வாகனங்களில் இருந்த பயணிகளிடம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை உபயோகிக்குமாறு எடுத்துக் கூறி அவற்றை அனைவருக்கும் இலவசமாகவும் முதன்மை நீதிபதி வழங்கினார். விழாவிலும், பேரணியிலும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தை சேர்ந்த காவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!






