ராமநாதபுரம் அரண்மனை முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டணியின் மாவட்ட தலைவர் எம்.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.முத்துமுருகன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் டி.ஜோசப் ரேஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கிராமப்புற பள்ளிகள் மூடுவதை அரசு கைவிட வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முழுமையான சிகிச்சைக்குரிய பணம் வழங்கப்பட வேண்டும், கலந்தாய்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் எஸ்.அருள் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!






