கடலாடி ஏ.புனவாசலில் அய்யனார், ஏகநாதர் கோயில்களில் புரவி எடுப்பு திருவிழாவையொட்டி திங்கள்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
சின்னமாடு, பெரிய மாடு என நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சின்னமாட்டில் 19 ஜோடிகளும், பெரிய மாட்டில் 21 ஜோடிகளும் பங்கேற்றன. இதில் ஏ.புனவாசலில் இருந்து இளஞ்செம்பூர் விலக்கு சாலையில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் திருநெல்வேலி மாவட்டம் வேளாங்குளம் கண்ணன் மாடு முதல் பரிசும், மதுரை மாவட்டம் பாண்டிகோவில் பாண்டிச்சாமி மாடு இரண்டாவது பரிசும், திண்டுக்கல் மாவட்டம் வெள்ள மரிச்சான்பட்டி செல்லப்பாண்டி மாடு மூன்றாவது பரிசும் பெற்றன. அதே போன்று பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் வெள்ள மரிச்சான்பட்டி செல்லப்பாண்டி மாடு முதல்பரிசும் , பாண்டிகோவில் பாண்டிச்சாமி மாடு இரண்டாவது பரிசும், திருநெல்வேலி மாவட்டம் நான்காம் தளம் உதயதுரைப்பாண்டியன் மாடு மூன்றாவது பரிசும் பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு, குத்துவிளக்கு, வெங்ண்கல பாத்திரம் என பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை ஏ.புனவசால் கிராமத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு: உதவி ஆணையர் உள்பட 8 பேர் சஸ்பெண்ட்!

ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!

கார்கில் போரில் இன்னுயிரை ஈந்த வீரர்களின் நினைவைப் போற்றுகிறோம்: மு.க. ஸ்டாலின்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியனான அனாஹத் சிங்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


