காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

"பயிர்க்காப்பீடு திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு 15 நாளில் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும்'

பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை விடுபட்டுப்போன  விவசாயிகளுக்கு 15 நாளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன்  தெரிவித்தார்.

Updated On :29 ஜூன் 2018, 1:18 am IST

பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை விடுபட்டுப்போன  விவசாயிகளுக்கு 15 நாளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன்  தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்து பேசியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 393 வருவாய் கிராமங்களில் இதுவரை மொத்தம் 382 வருவாய் கிராமங்களைச்  சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 11 வருவாய் கிராமங்களான கூகுடி, பெருங்குளம், தட்டனேந்தல், கள்ளிக்குடி, பொதுவக்குடி, சடைக்கானேந்தல், அரியமங்கலம், பெருநாழி, பம்மனேந்தல், நீராவி, டி.கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்குரிய உரிய  பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத்தொகை 15 நாட்களுக்குள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
கடந்த 2017-2018 ஆம் ஆண்டு வரை புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,49,696 விவசாயிகள் மூலமாக 1,22,640 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிருக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தது. இவற்றில் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக மட்டும் இதுவரை மொத்தம் ரூ.514.23 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு விட்டது. 
நீர்வள, நிலம்வள திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் 22 கண்மாய்களும், பரமக்குடியில் 31கண்மாய்களுமாக மொத்தம் 53 கண்மாய்கள் ரூ.20.51 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. நீடித்த நிலையான மானாவாரி இயக்ககத்தின் கீழ் 98 ஊருணிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.90 லட்சம் மதிப்பில் ஆழப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் ராமநாதபுரத்தில் சூரிய எரிசக்திப் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சி.முத்துமாரி, வேளாண்மை துணை இயக்குநர்கள் சொர்ணமாணிக்கம், எஸ்.எஸ்.ஷேக்அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா வரவேற்றார். இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.