கமுதியில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
கமுதி கண்ணார்பட்டியை சேர்ந்த மலைச்சாமி மகன் அருண்பாண்டி (16). இவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களான முதல்நாட்டை சேர்ந்த நம்புமணி (16), கண்ணார்பட்டியை சேர்ந்த நவீன் (16), அபிராமம் காட்டு சோடனேந்தலை சேர்ந்த கற்கண்டராஜன் (20) ஆகியோருடன் வெளியூர் சென்றுவிட்டு கமுதி நோக்கி வந்துள்ளனர்.
அய்யனார் கோவில் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் அருண்பாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் நம்புமணி), நவீன், கற்கண்டராஜன் உள்ளிட்ட மூவரும் பலத்த காயமடைந்தனர்.
இதில் நம்புமணி மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நவீன் மற்றும் கற்கண்டராஜன் இருவரும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கமுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.