ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சத்திரக்குடியில் தேசிய அறிவியல் தின விழா

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தேசிய அறிவியல் தினத்தை

News image
Updated On :1 மார்ச் 2018, 9:27 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் போகலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு போகலூர் உதவித் தொடக்க கல்வி அலுவலர் ஆ.தேன்மொழி பரிசுகள் வழங்கினார்.
விழாவிற்கு போகலூர் 
வட்டார வள மைய மேற்பார்வையாளர் என்.தனலெட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் கு.காந்தி, கவிஞர்.முகவை அழகுடையான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போகலூர் கிளை தலைவர் கோ.குமரேசன் வரவேற்று பேசினார்.  விழாவில் பாடகர் கருணாநிதி, ஆசிரியர்கள் வே.பூமிநாதன், பாண்டிச் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.