சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

உப்பளத் தொழிலாளர்கள்  வேலைநிறுத்தம் வாபஸ்

ராமநாதபுரம் மாவட்டம்,  வாலிநோக்கத்தில் உப்பு சுத்திகரிப்பு நிலையத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது என அரசு உப்பு நிறுவனத் தொழிலாளர்கள்

Updated On :29 மார்ச் 2018, 8:08 pm

ராமநாதபுரம் மாவட்டம்,  வாலிநோக்கத்தில் உப்பு சுத்திகரிப்பு நிலையத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது என அரசு உப்பு நிறுவனத் தொழிலாளர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
  ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவன வளாகத்திலேயே உப்பு சுத்திகரிப்பு நிறுவனமும் செயல்படுகிறது. இந்த உப்பு சுத்திகரிப்பு நிலையத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் விட முடிவு செய்யப்பட்டதையடுத்து உப்பு நிறுவனத் தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்மாதம் 27-ம் தேதி வாலிநோக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தொடர்ந்து அரசு உப்பு நிறுவனத் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் எம். சிவாஜி, உப்பு நிறுவனத் தொழிலாளர்கள் சங்க தலைவர் பச்சைமால், பொதுச் செயலாளர் முருகவேல் ஆகியோர் இம்மாதம் 28 மற்றும் 29 தேதிகளில் வேலைநிறுத்தத்தை அறிவித்து பணிகளைப் புறக்கணித்தனர். மேலும் 29-ம் தேதி வியாழக்கிழமை கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தையும் அறிவித்தனர்.
  இதனையறிந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் உப்பு நிறுவனத் தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில், தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் மற்றும் அரசு உப்பு  நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பேச ஒரு மாதத்தில் வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகவும் அதனால் வேலைநிறுத்தத்தை கைவிடும்படியும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார். அதுவரை உப்பு சுத்திகரிப்பு நிலையம் தனியாருக்கு கொடுப்பதற்கான முயற்சிகள் எதுவும்  செய்யப்பட மாட்டாது  எனவும் உறுதியளித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.