
தண்ணீர் வசதியில்லாததால் தேங்கிய நீரை பயன்படுத்தும் அவலம்
கமுதி அருகே கருங்குளத்தில் தண்ணீர் வசதியில்லாததால் சாலையோரம் வீணாகித் தேங்கியுள்ள நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.
கமுதி அருகே கருங்குளத்தில் தண்ணீர் வசதியில்லாததால் சாலையோரம் வீணாகித் தேங்கியுள்ள நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.
கமுதி அருகே கருங்குளத்தில் சாலையோரங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் கசிந்து, வீணாகி வருகிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீரை வடிகட்டி எடுத்து தள்ளுவண்டிகளின் மூலம் குடங்களில் சேகரித்து குடிக்க பயன்படுத்த கிராம மக்கள் எடுத்துச் செல்கின்றனர். மேலும் சாலையோர பள்ளங்களில் தேங்கியுள்ள நீரில் குளித்து, துணிகளை துவைக்கின்றனர். இதனால் வாகனங்கள் செல்லும்போது விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குறைந்த அளவு ஆழத்தில் அமைக்கப்பட்ட கைப்பம்பு, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கபட்ட அவை காட்சி பொருளாக உள்ளன. எனவே போதிய நிதி ஒதுக்கி, அதிக ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கருங்குளம் பகுதியில் உடனடியாக தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





