திருவாடானை அருகே மங்கலக்குடி ஆற்றுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதியின்றி மணல் அள்ளிய வாகன ஓட்டுநர்கள் 5 பேரை கைது செய்த போலீஸார், 4 டிராக்டர்கள், ஒரு டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மங்கலக்குடி ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக, திருவாடானை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அப்போது, அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த மங்கலக்குடியைச் சேர்ந்த சதாம் உசேன் (27), நஷீர் (24), நெடுமரத்தைச் சேர்ந்த தாமஸ் (30), சம்பூரணியைச் சேர்ந்த பாலமுருகன் (24) மற்றும் திருவாடானை சமத்துவபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (21)ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
மேலும், இவர்கள் மணல் அள்ளப் பயன்படுத்திய 4 டிராக்டர்கள், ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தப்பியோடிய பொக்லைன் இயந்திர ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

