ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

குடிக்க தண்ணீர் இல்லாததால் ஊரை காலி செய்யும் கிராம மக்கள்

கமுதி அருகே குடிக்க தண்ணீர் இல்லாததால் கிராமத்தினர் செந்த ஊரை காலி செய்து நகர் புறங்களுக்கு குடியேறுவதாக  தெரிவித்துள்ளனர்.

Published On :

கமுதி அருகே குடிக்க தண்ணீர் இல்லாததால் கிராமத்தினர் செந்த ஊரை காலி செய்து நகர் புறங்களுக்கு குடியேறுவதாக  தெரிவித்துள்ளனர்.
    கமுதி அருகே வண்ணாங்குளத்தில் 70- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்து 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. குடிநீருக்கும் புழக்கத்திற்காகவும் அமைக்கபட்ட ஆழ்துளைக் கிணறுகளும் வற்றியதால் டேங்கர் லாரிகளில் தண்ணீரை குடம் 10 ரூபாய் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளனர். 
குடிநீர் வசதி வேண்டி பல ஆண்டுகளாக மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லையாம். இதனால் கிராமத்தினர் செந்த ஊரை காலி செய்து நகர்ப்புறங்களுக்கு குடியேறி வருவதாக தெரிவித்துள்ளனர். வரும் செப் 15 இல், வண்ணாங்குளம் அரியநாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா தொடங்க உள்ள நிலையில், திருவிழாவிற்காக வரும் பக்தர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம நிர்வாகி தங்கராஜ் கூறுகையில், "" குடிநீர், புழக்கத்திற்கான ஆழ்துளை கிணறுகள் சேதமடைந்து, பயன்பாடின்றி உள்ள நிலையில், குடிநீர் வசதியின்றி பல குடும்பங்கள் நகர்ப்புறங்களில் குடியேறிவிட்டனர். இருக்கும் ஒரு சில குடும்பங்களும் தண்ணீருக்காக டேங்கர்களை நாடி உள்ளனர். தண்ணீர் வசதியில்லாததால், ஆண்டுக்கொருமுறை கொண்டாடப்படும் திருவிழாக்களுக்குகூட இக்கிராம மக்கள் ஊருக்கு வர தயக்கம் கொண்டுள்ளனர். குடிநீருக்காக அதிக ஆழத்தில் ஆழ்துளை கிணறுகளை அமைக்க பலமுறை மாவட்ட  நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 
ஊராட்சி அதிகாரிகளிடம் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்க, நீரூற்றுக்களை கண்டறிய அதற்கான கட்டணம் செலுத்தி, 4 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரையில்  நடவடிக்கை இல்லை. இதனால் தண்ணீருக்காக கிராம மக்கள் ஊரை காலி செய்து வரும் அவலம் உள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.