பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

கோயில் திருவிழாவில் நகை திருடிய 2 பெண்கள் பிடிபட்டனர்

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை கோயில் கும்பாபிஷேக விழாவில் நகை திருடியதாக பெங்களூருவைச் சேர்ந்த 2 பெண்களைப்

Published On :

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை கோயில் கும்பாபிஷேக விழாவில் நகை திருடியதாக பெங்களூருவைச் சேர்ந்த 2 பெண்களைப் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   ராமநாதபுரம் அருகே  உள்ள மூணுவலசை கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமியின் மனைவி அம்மாளு(70). ராமநாதபுரம் அருகே வழுதூரில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை பார்க்கச் சென்றிருந்தார்.அப்போது கூட்ட நெரிசலில் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை பெண்கள் இருவர் துண்டித்து எடுக்க முயன்றதை பார்த்த சிலர், அந்தப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தெரிவித்தனர். 
 உடனடியாக கேணிக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் தலைமையிலான போலீஸார் அவ்விரு  பெண்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள்,  பெங்களூருவைச் சேர்ந்த  ராமராஜ் மனைவி சௌடாம்பாள் (47), ராஜ் மனைவி பாக்கியம் (40) ஆகியோர் என தெரியவந்தது. 
இச்சம்பவம் தொடர்பாக மூதாட்டி அம்மாளு கொடுத்த புகாரின் பேரில்  இரு பெண்களையும் போலீஸார் கேணிக்கரை  காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.