ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

கூடுதல் விலைக்கு உரம் விற்பதை தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க 4 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

Published On :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க 4 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் சாகுபடி பணிகள் தற்போது நடந்து வருவதுடன் ஒரு சில கிராமங்களில் விதைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலும், தனியார் உர விற்பனை நிறுவனங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது யூரியா 2015 மெ. டன், டி.ஏ.பி.841 மெ.டன், பொட்டாஷ் 135 மெ.டன், கலப்பு உரங்கள் 826 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 30 மெ.டன் ஆக மொத்தம் 3847 மெ.டன் உரங்கள் விவசாயிகளுக்கு தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்வதை கண்காணிக்க 4 கண்காணிப்புக் குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காணிப்புக் குழுவானது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து உர இருப்பு  விபரம் மற்றும் விற்பனை விலை விவரம் தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறதா எனவும், உர மூட்டைகளில் அச்சடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் கண்காணிக்க குழுவுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 
உரங்களை அரசு நிர்ணயித்த விலைக்கு கூடுதலாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.