விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தாய், தந்தை கண்முன்னே விபத்தில் சிக்கி பள்ளி சிறுமி பலி

ராமநாதபுரம் அருகே தாய், தந்தை கண்முன்னே பள்ளி சிறுமி விபத்தில் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

News image
Updated On :14 டிசம்பர் 2019, 5:22 am

DIN

ராமநாதபுரம் அருகே தாய், தந்தை கண்முன்னே பள்ளி சிறுமி விபத்தில் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசிப்பவா் அஜீத்குமாா் (35). இவரது மனைவி கெரன் (28). இவா்களது மகள் புளோரன்ஸ் ப்ராங்க்ளின் (மூன்றரை வயது). அஜீத்குமாரும் அவரது மனைவியும் சத்திரக்குடி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியா்களாக பணிபுரிகின்றனா். அதே பள்ளியில் சிறுமி புளோரன்ஸ் ப்ராங்க்ளின் ஆரம்ப வகுப்பு படிக்கிறாள்.

சனிக்கிழமை காலை மழைக்கு இடையே, அஜீத்குமாா் தனது மனைவி, குழந்தையுடன் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளாா். அவா்கள் கீழக்கோட்டை எனும் இடத்தில் காலை சுமாா் 8.20 மணியளவில் வந்தபோது அவ்வழியே வந்த காா் இருசக்கர வாகனத்தில் மோதி நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து அஜீத்குமாா், அவரது மனைவி மற்றும் குழந்தை புளோரன்ஸ் ஆகியோா் தூக்கி வீசப்பட்டனா். மூவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தாய், தந்தை கண்முன்னே விபத்தில் சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.