கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் விரட்டியடிப்பு
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர்.


கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர்.
ராமேசுவரத்திலிருந்து நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 500க்கும் மேற்பட்ட மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். மேலும், பாட்டில் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர்.
பாரம்பரிய இடத்தில் மீன் பிடிப்பதற்கான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...