குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கமுதியில் நேதாஜி பிறந்தநாள் விழா

ராமநாதபுரம் மாவட்ட நேருயுவ கேந்திரா சங்கம் மற்றும் எருமைக்குளம் நேதாஜி இளைஞர் மன்றம் சார்பில்

Updated On :24 ஜனவரி 2019, 12:38 am IST

ராமநாதபுரம் மாவட்ட நேருயுவ கேந்திரா சங்கம் மற்றும் எருமைக்குளம் நேதாஜி இளைஞர் மன்றம் சார்பில் புதன்கிழமை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டப்பட்டது.
    நேருயுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் நோமான் அக்ரம் தலைமையில்,  தேசிய தன்னார்வ தொண்டர் மற்றும் பசும்பொன் இளைஞர் மன்றத் தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன், நேதாஜி இளைஞர் மன்றச் செயலர் ஓ.ரஞ்சித்குமார் ஆகியோரது முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. நேதாஜி மன்றத் தலைவர் ந.வடிவேல்  நன்றி கூறினார்.  பொருளாளர் முத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முன்னதாக கிராமத்தில் உள்ள தெருக்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்கள், பொதுமக்கள் சுத்தம் செய்தனர்.
   இதே போல் கமுதி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கல்லூரி முதல்வர் வே.அருணாசலம் தலைமையில், தாவரவியல்துறை தலைவர் தர்மர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் போ.பால்பாண்டியன் செய்தார்.
     கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.சண்முகவேல்தேவர் தலைமையில் மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலர் எஸ்.கே.தேவர், மாவட்ட அமைப்புச் செயலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. நிகழ்சியில் நேதாஜி, கண்ணன், மூவேந்தர் முன்னேற்றத் கழக கமுதி ஒன்றியச் செயலர் ராஜேந்திரன், மூவேந்தர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.