குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பரமக்குடியில் வள்ளலார் தைப்பூச ஜோதி வழிபாட்டு பெருவிழா

பரமக்குடி வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில்,  வள்ளலார் தைப்பூச ஜோதி வழிபாடு மற்றும் மத நல்லிணக்க

Updated On :24 ஜனவரி 2019, 12:40 am IST

பரமக்குடி வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில்,  வள்ளலார் தைப்பூச ஜோதி வழிபாடு மற்றும் மத நல்லிணக்க ஒருமைப்பாடு அன்னதான பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
     இவ்விழாவை, காவல் துணைக் கண்காணிப்பாளர் ரா. சங்கர் மதநல்லிணக்க சன்மார்க்க கொடியினை ஏற்றி தொடக்கி வைத்தார்.
          ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றினார். வாணி கருப்பணசுவாமி பூசாரி சிவக்குமார் தலைமை வகித்தார். காவல் சார்பு-ஆய்வாளர் கருணாநிதி, தொழிலதிபர் கே.வி.எஸ். பாண்டியன், பா.ஜ.க. மண்டலப் பொறுப்பாளர் கே. சண்முகராஜ், இமானுவேல் சேகரன் பேரவை மாநிலச் செயலர் கே. சந்திரபோஸ், எமனேசுவரம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஏ.ஜே. ஆலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    வழக்குரைஞர்கள் சி. பசுமலை, லிங்கமூர்த்தி ஆகியோர் மத நல்லிணக்கம் குறித்து பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, ஓம் சக்தி மன்றத் தலைவி மல்லிகா, ராசு, சன்மார்க்க சங்க பொருளாளர் சுப்புலெட்சுமி ஆகியோர்  செய்திருந்தனர். அன்னதானம் நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.