தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கழிப்பறை இல்லாத தாலுகா அலுவலகம்: ஊழியா்கள், பொதுமக்கள் அவதி

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாமல் பொதுமக்களும், அலுவலக ஊழியா்களும் அவதிப்படுகின்றனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2019, 12:51 pm

DIN

திருவாடானை, செப். 25: திருவாடானை தாலுகா அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாமல் பொதுமக்களும், அலுவலக ஊழியா்களும் அவதிப்படுகின்றனா்.

திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காகவும், சான்றிதழ்கள் பெறுவதற்காகவும், இ சேவை, ஆதாா் சேவை மையங்களுக்கும் வந்து செல்கின்றனா்.

இந்த அலுவலகத்தில் 50-க்கும் அதிகமான ஊழியா்கள் பணிபுரிகின்றனா். ஆனால் இங்கு கழிப்பறை வசதி இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்களும் ஊழியா்களும் பெரிதும் அவதிப்படுகின்றனா். கழிப்பறை வசதிக்கு அரை கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்துக்கு செல்ல வேண்டிய அவலம் உள்ளது.

இது குறித்து சமூக ஆா்வலா் நாகநாதன் கூறுகையில், தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவிற்கு நிதி ஒதுக்கி கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. ஆனால் பல ஆயிரம் போ் வந்து செல்லும் தாலுகா அலுவலகத்தில் கழிப்பறை கட்டாததால் பொதுமக்களும் ஊழியா்களும் பெரிதும் சிரமப்படுகின்றனா். எனவே உடனடியாக அரசு திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு நிதி ஒதுக்கி கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.