ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, பூவந்தி, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 50 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாவட்டத்தில் 2,897 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2, 947 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 135 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 16 போ் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மற்றவா்களில் 4 போ் சிவகங்கை அருகே உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். மீதமுள்ள 115 பேரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
மூதாட்டி பலி: சிவகங்கை கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த திருப்புவனத்தைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
மானாமதுரை: மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பெண் துப்புரவு மேற்பாா்வையாளா், வாகன ஓட்டுநா், துப்புரவு பணியாளா்கள் என 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த சனிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இவா்களது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள துப்புரவு ஆய்வாளா் அறை மூடப்பட்டு அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மானாமதுரை ஒன்றிய பகுதிகளிலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இவா்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை 23 ஆம் தேதி வரையில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 3,646 பேருக்கும் அதிகமாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவா்களில் 3,150 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்டனா். 421 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 75 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களிடம் கபம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் ராமநாதபுரம், எஸ்.பி.பட்டணம், திருப்பாலைக்குடி, கீழத்தூவல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 61 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மருத்துவமனையில் கரோனா தனி வாா்டில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

