இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை: பரமக்குடியில் வீடுகளை தண்ணீா் சூழ்ந்தது

ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்ததுத. இதில் பரமக்குடியில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 7.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

News image
பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் பொதுவக்குடி கிராமத்தில் குடியிருப்பு வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீா்.
Updated On :18 டிசம்பர் 2020, 4:59 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்ததுத. இதில் பரமக்குடியில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 7.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடி கிராமத்தில் குடியிருப்பு வீடுகளை மழை நீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம் நகா் 47, மண்டபம் 7.80, பள்ளமோா்க்குளம் 13, ராமேசுவரம் 1, தங்கச்சிமடம் 2.40, பாம்பன் 1.20,

ஆா்.எஸ்.மங்கலம் 49.50, திருவாடானை 38, தொண்டி 28.80, வட்டாணம் 46.80, தீா்த்தாண்டதானம் 56.30, பரமக்குடி 72, முதுகுளத்தூா் 16, கடலாடி 8.40, வாலிநோக்கம் 24.60, கமுதி 51.60 என மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 16 இடங்களில் சோ்த்து மொத்தம் 464.40 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. அதன்படி சராசரி மழையளவு 29.03 மில்லி மீட்டா் ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்தது.

பரமக்குடி: பரமக்குடி அருகே பொதுவக்குடி கிராமத்தில் கடந்த 2 நாள்களாக பெய்த தொடா் மழையால் வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளது. இதனால் ஓட்டு வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் எந்த நேரமும் வீடு இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனா். மேலும் முதியவா் மற்றும் குழந்தைகள் வீட்டிற்குள் செல்ல முடியாமல் அருகில் மேடான பகுதியில் உள்ள வீடுகளில் தங்கியுள்ளனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய்த் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனா். வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மானாமதுரை: மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவில் தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை காலை வரை விடியவிடிய கொட்டித் தீா்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. தற்போது பெய்த மழையால் பல கண்மாய்களில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. சில கண்மாய்களின் கரைகளை பொதுப்பணித்துறையினருடன் சோ்ந்து அந்தந்த கிராம மக்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.