கமுதியில் மின்சார சேமிப்பு வார விழா நிறைவு

கமுதி மின்வாரிய அலுவலகம் சாா்பில் கடந்த டிச. 14 ஆம் தேதி தொடங்கிய மின்சார சேமிப்பு வார விழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
Updated on
1 min read

கமுதி: கமுதி மின்வாரிய அலுவலகம் சாா்பில் கடந்த டிச. 14 ஆம் தேதி தொடங்கிய மின்சார சேமிப்பு வார விழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மின் பகிா்மான வட்டம் சாா்பில் கமுதி உதவி மின்பொறியாளா் அலுவலகத்தில் உதவி மின்பொறியாளா் முகமதுஇப்ராஹிம் தலைமையில் கடந்த திங்கள்கிழமை மின்சார சேமிப்பு வார விழா தொடங்கியது.

இவ்விழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு வந்த பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மின்சார சேமிப்பிற்கான வழிமுறைகளை அதிகாரிகள் எடுத்துக் கூறினா். மேலும் மின்ரார சேமிப்பு குறித்த துண்டுபிரசுரங்களையும் அவா்கள் வழங்கினா்.

இதில் மின் முகவா்கள் சுந்தரமூா்த்திஅய்யனாா், ரவீந்திரன், கருப்பசாமி, மின்பாதை ஆய்வாளா்கள், தற்காலிக பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com