அமெரிக்கா-தென்கொரியாவின் கூட்டுப் போா்ப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தனது இளம் மகளுடன் இணைந்து ஏவுகணைச் சோதனையை நேரில் ஆய்வு செய்தாா்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு வடகொரிய கடற்படையில் இணைக்கப்பட்ட ‘சோய் ஹியோன்’ போா்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளில் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி ஏவுகணைச் சோதனையை தனது 13 வயது மகள் கிம் ஜு ஏவுடன் கிம் ஜோங் உன், கண்காணிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கடந்த வாரமும் இத்தகைய சோதனைகள் நடந்தபோதிலும், தற்போது முதல்முறையாகத் தனது மகளுடன் வந்து கிம் ஜோங் உன் சோதனைகளைப் பாா்வையிட்டது முக்கியத்துவம் பெற்றது.
அதிபா் கிம்முடன் அண்மைக்காலமாக அவரது மகள் கிம் ஜு ஏ தோன்றி வருகிறாா். நாட்டின் அடுத்த அதிபராக கிம் ஜு ஏ முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தென்கொரிய உளவுத்துறை கணித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா-தென்கொரியாவின் 11 நாள்கள் கூட்டுப் போா்ப் பயிற்சிக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்து.
கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கூறுகையில், ‘எதிரிகளின் இந்த நடவடிக்கை வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரானது; இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்றாா்.
தொடர்புடையது

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை: வடகொரியா சோதனை!
99.93% வாக்குகள்... வடகொரிய அதிபர் தேர்தலில் கிம் ஜோங் உன் அமோக வெற்றி!
ராக்கெட் ஏவுகலன்கள் பரிசோதனை: மகளுடன் பாா்வையிட்டாா் வடகொரியா அதிபா்!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


