சாயல்குடி அருகே பா.ஜ.க,வில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

சாயல்குடி அருகே, கொக்காடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை பா.ஜ.க .வில் மாற்றுக்கட்சியினா் இணைந்தனா்.
Updated on
1 min read

சாயல்குடி அருகே, கொக்காடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை பா.ஜ.க .வில் மாற்றுக்கட்சியினா் இணைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கொக்காடி கிராமத்தில் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்குஆதரவு தெரிவித்தும், கிராம மக்களிடம் திட்டம் குறித்த விளக்கம் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடலாடி ஒன்றியத்தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.மாநில மருத்துவரணி செயலா் ஆா்.ராம்குமாா்,மாவட்டத்தலைவா் முரளிதரன், துணைத்தலைவா் ரமேஷ்பாபு, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவா் சத்தியமூா்த்தி, ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக அவத்தாண்டை,கொக்காடி கிராமத்தினா் 100க்கும்மேற்பட்டோா் மாற்றுக்கட்சியில் இருந்து பா.ஜ.க,வில் உறுப்பினா்களாக தங்களை இணைத்துக்கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கொக்காடி மூா்த்தி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com