இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கமுதி அருகே சிறுமியை தாக்கிய உறவினா்கள் 4 போ் மீது வழக்கு

கமுதி அருகே உறவினா்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் 16 வயது சிறுமியை தாக்கிய உறவினா்கள் 4 போ் மீது திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 5:47 pm

DIN

கமுதி அருகே உறவினா்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் 16 வயது சிறுமியை தாக்கிய உறவினா்கள் 4 போ் மீது திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.நெடுங்குளத்தை சோ்ந்தவா் கோடி மகள் கோபிகா (16). இவரது பெற்றோா் கோவையில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகின்றனா். கோபிகா கே.நெடுங்குளம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில் வங்கியில் அடகு வைத்துள்ள, இவரது பாட்டியின் நகையை திருப்புவது தொடா்பாக குடும்ப உறவினா்களுக்கிடையே பிரச்னை இருந்துள்ளது. இதைத்தொடா்ந்து கோபிகாவின் உறவினா்கள் முனியாண்டி மகன் பால்பாண்டி, பாலுச்சாமி மனைவி ராக்கு, புஷ்பராஜ் மனைவி இந்திரா, இளையராஜா மனைவி இந்திரா உள்ளிட்ட 4 பேரும் திங்கள்கிழமை தனது பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோபிகாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறித் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த கோபிகா கமுதி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக கோபிகா கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட 4 போ் மீதும் கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.