மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கடலுக்குச் சென்ற மீனவர் மாரடைப்பால் சாவு

ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்று மீன்பிடித்த மீனவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 

News image
கோப்புப் படம்
Updated On :7 ஜூலை 2020, 5:56 am

DIN

ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்று மீன்பிடித்த மீனவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
ராமேசுவரத்தில் இருந்து திங்கட்கிழமை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மார்க்கோ போலோ என்பவரது விசைப்படகு மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது மீனவர் சுபாசந்திரபோஸ் (27) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை கண்ட சக மீனவர்கள் அலங்காரம், தமிழ்செல்வன், சிரில் டென்னில் ஆகியோர் படகை கரைக்கு கொண்டு வந்து உயிரிழந்த மீனவர் உடலை ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் செவ்வாய்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.