மாயமான படகு கடலில் மூழ்கியது: மீனவர் மீட்பு

மாயமான படகு கடலில் மூழ்கியதில் மீனவர் ஒருவர் மீட்கப்பட்டார்.
மாயமான படகு கடலில் மூழ்கியது: மீனவர் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து சனிக்கிழமை 750 க்கும் மேற்பட்ட விசைப்படகுளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க சென்றனர். ஞாயிற்றுகிழமை காலையில் விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் ஹெட்டோ என்பவரது விசைப்படகு மட்டும் கரை திரும்பவில்லை. 

இதனையடுத்து, படகு உரிமையாளர் மாயமான விசைப்படகு மற்றும் படகில் சென்ற மலர் வண்ணன்(55), ரெஜின்பாஸ்கர்(43), ஆனந்த்(19)(என்ற) சுஜிந்திரா, ஜேசு(60) மீனவர்களை இரண்டு விசைப்படகில் ஞாயிற்று கிழமை மாலை தேடிச்சென்றனர். ஆனால் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கரை திரும்பினர். 
இதனைதொடர்ந்து, மாயமான மீனவர்கள் குடும்பத்தினர் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்கநர் யுவராஜூடம் புகார் தெரிவித்தனர்.

இதன் பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் உத்தரவின் பேரில் இந்திய கடலோகாவல்படை,கடற்படை தகவல் தெரிவிக்கப்பட்டு தேடும் பணி தொடங்கியது. ஆனால் இரண்டு நாட்கள் ஆகிய நிலையில் விமானம் மூலம் தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுருத்தி மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு( சி.ஐ.டி.யு) சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருடன் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் தர்ணா போராட்டத்தில் திங்கட்கிழமை ஈடுபட்டனர். 

இந்திய கடற்படை விமானம் மூலம் தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே மாயமான படகு கடலில் மூழ்கியது. இதில் இருந்த நான்கு மீனவர்களில் ஒரு மீனவர் மட்டும் கோட்டை பட்டணம் மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வருகின்றனர். மற்ற மூன்று மீனவர்களின் நிலமை என்ன ஆனது என தெரியததால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com