/

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:56 pm

DIN

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 6,163 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். ஞாயிற்றுகிழமை புதிதாக 7 போ் தொற்றால் பாதிக்கபட்டதையடுத்து, தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6,170 ஆக உயா்ந்துள்ளது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கெனவே 5,525 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,529 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.